ஸ்டாலினை சந்திக்கத் தயாராகும் தமிழ்த் தேசியக் கட்சிகள்!

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்திப்பதற்கு தமிழ்த் தேசியக் கட்சிகளின் பிரதிநிதிகள் குழுவொன்று தயாராகியுள்ளது. இதற்கான பூர்வாங்க பேச்சுவார்த்தைகள் நிறைவடைந்துள்ள நிலையில் விரைவில் குறித்த குழுவினர் விரைவில் தமிழகம் செல்வுள்ளனர்.

தமிழ் மக்களுக்கு நியாயமான அதிகாரங்களை பகிர்ந்து இனப்பிரச்சினைக்கான நிரந்த அரசியல் தீர்வினைப் பெற்றுத்தருவதற்காக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஊடாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசாங்கத்திற்கு தொடர்ச்சியான அழுத்தங்களை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை மேற்படி குழுவினர் முன்வைக்கும் முகமாகவே இந்தச் சந்திப்பு இடம்பெறவுள்ளது.

அத்துடன் தமிழ்த் தேசியக் கட்சிகளின் பிரதிநிதிகள் குழுவினர்ரூபவ் தமிழக ஆளும் கட்சியான திராவிட முன்னேற்றக்கழகத்தின் பங்காளிக்கட்சிகளின் தலைவர்களான தொல்.திருமாவளவன், வை.கோபாலசாமி உள்ளிட்டவர்களையும் தமிழர் விவகாரங்களுடன் தொடர்புடைய அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் உணர்வாளர்களையும் சந்திப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும், இந்த விஜயத்தின் மூலம் தமிழக அரசியல் தலைமைகளுக்கும் வடக்குரூபவ்கிழக்கு உள்ளிட்ட இலங்கை தமிழ் தேசிய அரசியல் கட்சிகளின் பிரதிநிதி நிதிகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை புதுப்பித்துக்கொள்வதற்கு வழிசமைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

தற்போதைய நிலையில், இந்த விஜயத்தில் பங்கெடுப்பவர்கள் பற்றிய தகவல்கள் எவையும் வெளிப்படுத்தப்படாத போதும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புரூபவ் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஆகிய பிரதான அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்கவுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

சிலசமயங்களில், மனோகணேசன் தலைமையிலான தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதிநிதிகள், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதிநிகள், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரதிநிதிகள் ஆகியோரும் பங்கேற்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

இதேவேளை, இந்த நகர்வில் வகிபாகத்தினைச் செய்துவரும் புலம்பெயர் அமைப்புக்களின் பிரதிநிதிகளும் குறித்த சந்திப்புக்களில் பங்கேற்பதற்கான சந்தர்ப்பங்கள் உள்ளதாகவும் நம்பகரமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert