ஒமைக்ரான் கொரோனா பாதிப்பு – அமெரிக்காவில் முதல் உயிரிழப்பு

ஒமைக்ரான் கொரோனா தொற்றால் அமெரிக்காவில் முதல் உயிரிழப்பு நேரிட்டுள்ளது.

டெக்சாஸை சேர்ந்த 50 வயது நபருக்கு அண்மையில் ஒமைக்ரான் தொற்று கண்டறியப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். அந்த நபர் , கொரோனா தடுப்பூசி செலுத்தாதவர் என டெக்சாஸ் அரசு தெரிவித்துள்ளது.

கடந்த ஒரு வாரத்தில் அமெரிக்காவில் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 73 விழுக்காடு மக்களுக்கு ஒமைக்ரான் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக கூறியுள்ள அமெரிக்கா அரசு, தற்போது அமெரிக்காவில் வேகமாக பரவி வரும் கொரோனா திரிபு ஒமைக்ரான் என அறிவித்துள்ளது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM