அமெரிக்காவிலும் வேகமாக பரவும் ஒமைக்ரான் தொற்று

தென்னாப்ரிக்கா, பிரிட்டனை தொடர்ந்து அமெரிக்காவிலும் ஒமைக்ரான் வகை கொரோனா வேகமாக பரவத் தொடங்கியுள்ளது.

அமெரிக்காவில் தினசரி பதிவாகும் புதிய கொரோனா தொற்றுகளில் ஒமைக்ரான் வகை தொற்றுகளின் பங்கு மட்டும் 73% ஆகும் என அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. புதிய கொரோனா தொற்றுகளில் ஒமைக்ரானின் பங்கு ஒரே வாரத்தில் 6 மடங்கு அதிகரித்துள்ளதாகவும் சுகாதாரத்துறை கூறியுள்ளது. ஒமைக்ரான் தொற்று குறித்த எச்சரிக்கையை தென்னாப்ரிக்கா கடந்த 25 நாட்களுக்கு முன் விடுத்த நிலையில் தற்போது அத்தொற்று இந்தியா உள்ளிட்ட 90 நாடுகளுக்கு பரவியுள்ளது.

இதற்கிடையில் ஒமைக்ரான் தொற்று வேகமாக பரவுவது தற்போது மேலும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. தடுப்பூசி செலுத்தியவர்களையும் ஏற்கெனவே தொற்றால் பாதிக்கப்பட்டவர்களையும் கூட ஒமைக்ரான் மீண்டும் பாதிப்பதாகவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM