சிறுப்பிட்டி அருள்மிகு ஸ்ரீ மனோன்மணி அம்பாள் வருடாந்த‌ மஹோற்சவம் (2022)

சிறுப்பிட்டி_வல்லையப்புலம் அருள் மிகு

ஸ்ரீ மனோன்மணி (கருணாகடாக்ஷி) அம்பாள் தேவஸ்தானம்.

சுபகிருது வருஷ மஹோற்சவப் பெருவிழா2022:

சிறுப்பிட்டி வல்லையப்புலத்தில் சகல

செல்வங்களுடனும் ஆன்மாக்களை உய்விக்கும் பொருட்டு எழுந்தருளி அருளாட்சி புரியும் ஜெகன் மாதாவாகிய மஹா திரிபுர சுந்தரி அருள் மிகு ஸ்ரீ மனோன்மணி அம்பிகைக்கு நிகழும்

மங்கல கரமான பிலவ வருஷம் ஆவணித்திங்கள் 15ம் நாள் 31.08.2022 புதன்கிழமை காலை 06:00 மணிக்கு

சங்கற்ப வழிபாடு அதனைத் தொடர்ந்து

7:00 மணிக்கு அபிஷேகம், 8.00 மணிக்கு விஷேட பூஜை வழிபாடுகள் 08.30

மணிக்கு வசந்தமண்டப பூசை, 10.00 மணிக்கு கொடியேற்றம்

(துவஜாரோகணம்) ஆசிவழங்கல், உள் வீதி உலா வெளி வீதி எட்டுதிக்கும் சந்தியாவாகனம் கிரியை இடம்பெற்று பாத தீர்த்தம் கொடுக்கப்பட்டு அம்பாள் வசந்த மண்டப இருப்பிடத்தில் வைக்கப்பட்டு பஞ்சாராத்தி காட்டப்பட்டு வீபூதிபிரசாதம் வழங்கல் பகல் 01:00 மணிக்கு விழா இனிதே நிறைவுறும் ……

அன்று விநாயகர் சதுர்த்தி, காலை நவகும்பம் அபிஷேகம் இடம்பெறும்🙏

தினமும் மாலை 4.00 மணிக்கு பூஜைகள்

ஆரம்பமாகி அதை தொடர்ந்து

யாகசாலை பூஜைகள் கொடிதம்ப

பூஜைகள் நடைபெற்று அதனை

தொடர்ந்து சுத்துப்பல்லி பூஜை

நடைபெற்று வசந்த மண்டப பூஜைகள் நடைபெற்று அம்பாள் உள்வீதி உலா எழுந்தருளி யாகசாலை பூஜைகள் நடைபெற்று அம்பாள் வெளி வீதி வலம் வந்து அதை தொடர்ந்து அடியார்களுக்கு விபூதி, சந்தனம் போன்ற பிரசாதங்கள் வழங்கப்பட்டு 8.00 மணிக்கு இரவு பூஜைகள் நிறைவு பெறும்,

தொடர்ந்து 12 தினங்களும் இரு

வேளையும் திருவிழா நடைபெறும்,

# 01/09/2022 :::2ம் திருவிழா அன்று மணவாளக் கோலம் (ஆவணி மாத சுவாதி நட்சத்திரம்)108 வலம்புரிச் சங்குகளினால் சங்காபிஷேகம் இடம்பெறும்

#07.09.2022 வேட்டைத் திருவிழா உற்சவமானது காலை திருவிழா பூஜைகள் இனிதே நிறைவேறி பின்பு மாலை உற்சவமானது சரியாக 2.40 மணியளவில் சுற்று பரிவார பூஜைகள் இடம்பெற்று 3.00மணிக்கு யாக பூஜைகள் இடம்பெற்று 3.30மணியளவில் கொடித்தம்ப பூஜைகள் இடம்பெற்று தொடர்ந்து சுத்துப்பலி இடம்பெற்று பின்பு 4.00மணியளவில் வசந்தமண்டப பூஜைகள் இடம்பெற்று 4.40மணியளவில் அம்பாள் இருப்பிடத்திலிருந்து எழுந்து உள்வீதி வலம் வந்து யாக தரிசனப் பூஜைகள் இடம்பெற்று பின்பு 5.05 மணியளவில் அம்பாள் புராதன குதிரை வாகனத்தில் வேட்டைக்கு எழுந்தருளி சிறுப்பிட்டி வடக்கு ஞான வைரவர் ஆலயத்திற்கு மேளதாளம், பொம்மல் ஆட்டத்துடனும் எழுந்தருளி செல்லுகின்ற காட்சியை காணலாம். அங்கு புண்ணியதான பூஜைகள் இடம்பெற்று வாழை வெட்டு நிகழ்வு இடம்பெற்று தொடர்ந்து அம்பாள் வரவேற்கப்பட்டு பாத தீர்த்தம் கொடுக்கப்பட்டு தம்பமண்டபத்தில் அம்பாள் வைக்கப்பட்டு பின்பு வைரவர் சுவாமிக்கு பரிவாரப் பூஜைகள் இடம்பெற்று அத்துடன் அம்பாளுக்குரிய விசேட பூஜைகள் இடம்பெற்று விபூதி பிரசாதம் வழங்கபட்டு அம்பாள் உள் வீதி வெளி வீதியுலா வலம் வந்து பின்பு அம்பாளை வரவேற்பதற்காக ஒவ்வொரு வீட்டு வாசலிலும் வைக்கப்பட்ட மண்டபபடி நிறைவு செய்து பின்பு அம்பாள் தன்னிருப்பிடத்தில் வெளிவீதியுலா வந்து தொடர்ந்து பிராயச்சித்த அபிஷேகம் இடம்பெறும் வைரவர் சுவாமிக்கும் சண்டேஸ்வரர் சுவாமிக்கும் பூஜை நடைபெற்று #இரவு 10:00 மணிக்கு வேட்டை திருவிழா உற்சவமானது இனிதே நிறைவடையும்,

# 08.09.2022 மாலை 7.00 மணிக்கு சப்பறத்திருவிழா,

# 09.09.2022 10ம் நாள் தேர்த்திவிழா காலை 5.00 மணிக்கு அபிஷேகத்துடன் ஆரம்பமாகி காலை 7.00 மணிக்கு வசந்தமண்டப பூஜை காலை 8.30 மணிக்கு தேர்த்திருவிழா, 10:30 மணிக்கு நவசக்தி அர்சனை,

11:15 மணிக்கு பிராயச்சித்த அபிஷேகம் விபூதி பிரசாதம் வழங்கப்பட்டு பகல் தேர் உற்சவம் இனிதே நிறைவாகும்

# 10.08.2022 தீர்த்தோற்சவம்: காலை 9.00 மணிக்கு வசந்தமண்டப பூஜை,

10.00 மணிக்கு அம்பாள் தீர்த்தோற்சவத்திற்காக எழுந்தருளி கோயிலின் உட்பிரகார வடக்கு வீதியில் திருமஞ்சனக் கிணற்றில் தீர்த்தோற்சவம் இடம் பெறும்,

#மாலை 7.00 மணிக்கு கொடியிறக்கம்;

# 11.08.2022. 12ம் நாள் காலை 9.30மணிக்கு பிராயச்சித்த அபிஷேகம் #மாலை 7.00 மணிக்கு பூங்காவன உற்சவம்,

#12.08.2022 13 நாள் மாலை 5.00 மணிக்கு காத்தவராய சுவாமி, வைரவர் சுவாமிக்கும் அபிஷேகம் இடம்பெறும்.

#அடியார்கள் இக்காலங்களில் ஆலயத்திற்கு வருகை தந்து அரச சுகாதாரப்பிரிவின் நடைமுறைகளைப் பின்பற்றி இறைவனை தரிசித்தும் அபிஷேகத்திற்கு வேண்டிய பால், தயிர், அறுகம்புல் ,பூவகை, தேங்காய், பூமாலை, தேங்காய் எண்ணெய் போன்ற சிவத்திரவியங்களை நல்கியும் அம்பாளினது இஸ்டசித்திகளை பெற்றுய்யும் வண்ணம் வேண்டுகிறோம்.

மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெல்லாம் சுபம்🙏

#ஆலய_பரிபாலனசபையினர்

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert