கவிஞை சுதந்தினி.தேவராசா அவர்களின் பிறந்தநாள் வாழ்த்து(13.11.2022)
சிறுப்பிட்டி பூங்கொத்தையை பிறப்பிடமாக கொண்ட தேவராசா அவர்களின் தணைவியார் சுதந்தினி.தேவராசா அவர்கள் 13.11.2022 தனது பிறந்தநாளை தனது இல்லத்தில் கணவன் பிள்ளைகள் மச்சாள்மார் மச்சான்மார் .சகலன். சகலிமார்.மருமக்கள் பெறாமக்களுடனும் உற்றார் உறவினருடனும் கொண்டாடுகிறார்
இவர் கவிஞரும் இணையங்களின்,STSதமிழ்தொலைக்காட்சி நிர்வாகியும் பாடகரும் ஆவர் ஜெர்மனி கம் அம்மன் ஆலைய முதல் பக்திப்பாமாலையில் குழுப்பாடகராக ஆரம்பித்து பின் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா இசையமைப்பில் என்.வி.சிவநேன் வரிகளில் உருவான புதிய மலர்கள் என்ற மழலைகள் இசைப்பேளையிலும் பாடலைப்பாடியவரும்கூட இந்த இசைப்பேளையை வெளியிட்டு வைத்தவர் தென் இந்தியத்திரைப்படப்பாடகர் தீபன் சக்கரவர்த்தி அவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது .
அதுமட்டுமல்ல இவர் எழுதிய பத்திப்பாடல்களும் இசைப்பேளைகளாகவும் வெளிவந்துள்ளது. அத்தோடு இணையங்களில் இவர் எழுதிய கவிதைகள் வெளிவந்தது. மேலும் கலைஞர்கள் இணையமான ளு.வு.ளு இணையநிர்வாகியில் ஒருவரான சுதந்தினி.தேவராசா அவர்களை அவர்சிறப்புக்காய்இ இன்னும் செய்ய உள்ள பல பணிக்காய்இ புதிய படைப்புக்களுக்காய்இ இன் நாளில் வாழ்த்துவோம்.