சிறுப்பிட்டி இலுப்பையடி முத்துமாரி அம்மன் அருள்பாலித்து எமை எல்லாம் ஆண்டு வருகிறாள்.
அவள் அருளால் எமது வாழ்கை சிறந்தோங்கி வளம் ஓங்கி வாழ்வோங்கி நிற்கக் காரணமாய் காட்சி தரும் நாயகி, அவள்

எம்மை எல்லாம் ஆட்கொள்ளும் சிறுப்பிட்டி இலுப்பையடி முத்துமாரியம்மன் ஆலயத்தின்
12 ஆண்டுக்கு ஓர் முறை புனரமைப்புடன் கூடிய பாலதானம்  காரணமாக இந்த ஆண்டு திருவிழா நிறுத்தப்பட்டு  அதன் புனரமைப்புப் பணிகள் ஆரம்பமாக உள்ளது.

இதற்கான முதல் கட்டமாக ஆலயத் திருவிழா உபயகாறர்கள் தங்கள் சார்பிலான நிதிவழங்கள் நடைபெற்றுள்ளது. அதைத் தொடர்ந்து  இந்த ஆலயத்துக்காக  தாங்கள் தங்கள் குடும்பத்தினர்,
தெய்வச்சிலைகளை வாங்கி வழங்கியவர்கள்,  அதர்க்கான புனரமைப்புப் பணிகளை செய்ய முன்வருபவர்கள் ஆலய நிர்வாகத்துடன் தொடர்புகொண்டு அதன் பணிகளை செய்யலாம்.

அத்தோடு இந்த அம்மன் ஆதரிப்பாளர்கள் எமது ஊர் ஆலயச்சிறப்பு  மிளிர நீங்களாக முன்வந்து அதன் புனரமைப்பில் கலந்து  எமது ஆலய சிறப்புக்கு கரம்கொடுங்கள்.

இதற்து ஊர்மக்கள் உறுதுணையாவீர்கள்  என்பது எமக்குத்தெரியும், ஏனெனில் இந்த ஆலயம் இன்று இவ்வளவு வளர்வுகாண சிறப்புற நீங்கள்தான் காரணிகள்.

அதனால் இப்பணியில் நாங்கள் சொல்ல வேண்டியது எதுவும் இல்லை, உங்களுக்கு இந்தத் தகவலை அறியத்தருகின்றோம்  அவ்வளவுதான்.

இங்கே கீழ் அன்னளவாக இணைக்கப்படும் கணக்கு,  உங்கள் பார்வைக்கு எமது ஊர் இணையத்தில் நீங்கள் பார்க்கலாம்.

நாங்கள் குறிப்பிட்டடுள்ள இந்தக்கணக்கில் ஆறு லச்சத்துக்காண வேலைகளை எமது ஊர்வாழ் புஸ்பராணி அவர்களின் மகள் (ராஐி ) இப்போது லண்டனில் வாழ்ந்துவருகின்றார், அவர் தன்கணவனுடன் ஊர்வந்தபோது மேல் குறிப்பிட்ட தொகைக்காண பணியை கீழ் கணக்கு விபரத்துடன் குறித்துள்ள வேலைகளை தாமாக முன்வந்து செய்து  தருகிறார்கள்.

இது போல் நீங்களும் எமது ஆலயத்தின் சிறப்புக்கு  முன்வந்து கீழ்காணும் வேலைகளை செய்ய விருப்பம் உள்ளவர்கள் ஆலயத்தின் புதிய நிர்வாகத்துடன் தொடர்பு கொள்ளுங்கள்  என அன்புடன் கேட்டு நிற்கின்றனர் ஆலய நிர்வாகத்தினர்.

தலைவர்     : க.தம்பிராசா
உபதலைர   :ஆர். மயூரன்
செயலாளர் : செ.ஸ்ரீதரன்
உபசெயலாளர்: திருமதி புனிதாவதி.சிவலிங்கம்
பொருளாலர் : பொ.ஸ்ரீதரன் ( வசந்த்)

நிலத்திலும் புலத்திலும் உறவுகள் கூடி நிற்பதால்தான் எங்கள் ஆலயம் சிறந்து நிற்கின்றது, அம்மன் துணைகொண்டு அவள் அருள் வேண்டி அவள்பாதம் பணிசெய்வோம் ஊரும் உலகமும் சிறக்க.