இவ் வேளையிலே இந்த ஆலயத்தின் தோன்றல் பற்றி பார்ப்பது மிக நல்லது . சிறப்பான திருவிழாக்களைக்கொண்டாடி இலுப்பையடி அம்மன் இன்று சிறப்புற்று நிற்பதர்க்கு நாங்கள் வாழ்வில் மறக்கமுடியாத அம்மன்பக்தர்தான் காரணம் . அவர் தன் சேவையை அம்மனுக்காகச் செய்து இந்த அம்மனை இலுப்பையடியில் ஓர் சிறிய ஆலயமாக இருந்தபோது அவள் பக்தனாக பல ஆண்டுகள் பூயித்து பூசை செய்து அம்மன் அடிசேர்ந்தார். அமரர் தா. சின்னையாவை நாம் நம் உறவுகள் அவர் நினைவை மீட்டிப்பார்ப்பதுமிக அவசியம்.

அத்தோடு இன்றைய திருவிழாவை அவர் மருமகள் குடும்பத்தைச் சேர்ந்த நவரத்தினம்-புஸ் பராணி குடும்பத்தினர் அம்மன் அலங்காரத்திருவிழா சப்பறத்திருவிழாவாக (31.04.2014)இன்று பத்தாம் நாள் திருவிழாவாக சுவாமி சப்பறத்தில் வீதி உலா வந்து நவரத்தினம்-புஸ் பராணி குடும்பத்தினர் தமது பிள்ளைகளுடன் இணைந்து சிறப்புற சுவாமி சப்பறத்தில் வீதி உலா வந்து சிறப்பாக பூசைகள் நிறைவேறியுள்ளது எனத் தகவல் எம் ஊர் இணையத்துக்காக எமது இணைப்பாளர் அம்மன் பக்தர் திரு.மயூரன்.