இனி 20 நிமிடங்களுக்குள் விமான நிலையத்திலிருந்து வெளியேறலாம்!

கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்துக்கு வரும் பயணிகளை 20 நிமிடங்களுக்குள் விமான நிலையத்திலிருந்து வெளியேற அனுமதிக்கும் புதிய ஒன்லைன் முறைமை, இன்று (26) அறிமுகப்படுத்தப்பட்டது.

சிவில் விமான போக்குவரத்து மற்றும் ஏற்றுமதி வலய அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் டி.வி.சானக்கவினால் இந்த ஒன்லைன் முறைமை விமான நிலையத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இந்த முறையை அறிமுகப்படுத்தியதன் பின்னர், ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த இராஜாங்க அமைச்சர்,

இந்த புதிய ஒன்லைன் முறையின்படி, நேரம் 20 நிமிடங்களுக்கு  குறைக்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கு விஜயம் செய்யும் பயணிகள் விமான வருகையின் போது அல்லது கட்டுநாயக்க விமான நிலையத்தை அடைந்த பின்னர், www.airport.lk ஊடாக https://www.airport.lk/health_declaration/index என்ற பின்வரும் இணைப்பின் ஊடாக தமது விவரங்களை வழங்க முடியும்.

வருகைக்கான ஓய்வறையில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள QR குறியீட்டை அணுகுவதன் மூலம் பயணிகள் தமது விவரங்களை பதிவேற்றலாம்.

அவர்களின் தடுப்பூசி அட்டை மற்றும் இலங்கைக்கு வருவதற்கு 72 மணித்தியாலங்களுக்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையின் பெறுபேறுகளை இந்த அமைப்பின் கீழ் ஒன்லைனில் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

இது, பயணிகள் வரிசையில் காத்திருப்பது மற்றும், ஏராளமான ஆவணங்களைச் சரிபார்ப்பது அல்லது பிற சாதனங்களைப் பயன்படுத்தி தகவல்களை அனுப்புவது போன்றவற்றிலிருந்து அவர்களை விடுவிக்கிறது.

இந்த புதிய அமைப்பு பயணிகள் 20 நிமிடங்களுக்குள் விமான நிலையத்திலிருந்து வெளியேற அனுமதிப்பதன் காரணமாக இது கொவிட் தொற்றுநோயால் பாதிக்கப்படும் அபாயத்தைக் குறைக்கிறது.

2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்துக்குள் கட்டுநாயக்க விமான நிலையம் முழுமையாக டிஜிட்டல் மயமாக்கப்படும் என்றும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert