ஓமந்தை – தாண்டிக்குளம் பகுதியில் முச்சக்கரவண்டியை பந்தாடிய ரயில்!

கொழும்பில் இருந்து காங்கேசன்துறையை நோக்கிச் சென்று கொண்டிருந்த குளிரூட்டிய ரயில் முச்சக்கர வண்டியொன்றை மோதித் தள்ளியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் ஓமந்தை – தாண்டிக்குளம் பகுதியில் இன்று முற்பகல் 10.45 இடம்பெற்றுள்ளது.

தாண்டிக்குளம் ரயில் நிலையத்துக்கு அண்மையில் பாதுகாப்பற்ற கடவையை கடக்க முயன்ற முச்சக்கர வண்டி வித்தில் சிக்கி சேதமடைந்ததுடன் இதன் சாரதி பாய்ந்து உயிர்தப்பியுள்ளார்.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert