காதலிக்க மறுத்த யுவதியை இடியனால் சுட்டுக் கொன்ற இளைஞன்!
தனது காதலுக்கு சம்மதம் தெரிவிக்காத 30 வயதுடைய யுவதியை இளைஞன் இடியன் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுள்ளார். இன்று காலை மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போதே அவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. வவுனியா வடக்கு சேனைப்பிலவு எல்லைக் கிராமத்தில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்த சம்வத்துடன் தொடர்புடைய இளைஞன், நெடுங்கேணி பொலிஸாரால் ஏற்கனவே கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தினால் தண்டிக்கப்பட்டவர் என்றும் கூறப்படுகிறது.