யாழில் கடை உடைத்து அரிசி கொள்ளை!

யாழ்.அச்சுவேலி மேற்கில் வர்த்தக நிலையம் ஒண்ரூ உடைக்கப்பட்டு 10 மூடை குத்தரிசி திருடப்பட்டுள்ளதாக அச்சுவேலி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

யாழ்ப்பாணம் – பருத்தித்துறை பிரதான வீதியில் உள்ள வர்த்தக நிலையத்திலேயே நேற்று முன்தினம் இந்த திருட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்த களவு தொடர்பில் அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில், அதுதொடர்பான விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert