உலகவாழ் அனைத்து சிறுப்பிட்டி உறவுகளுக்கான தகவல் ஒன்று
உலகவாழ் அனைத்து சிறுப்பிட்டி உறவுகளுக்கு வணக்கம்.. இன்றுவரை நம் ஊரின் நலன் விரும்பி உழைத்த எல்லோருக்கும் ஓர் மகிழ்வான நாள் மட்டுமல்ல ஒரு சிறப்பான நாளும் கூட. எங்கள் ஊராம் சிறுப்பிட்டி மண்னின் வரலாறு மிக்க அம்மன் ஆலையத்தில் புதிய சப்பறம் செய்து திருவிழா நடைபெற்றது.
அத்தருணம் உங்கள் சிறுப்பிட்டி உலகத்தமிழர் ஒன்றியமானது ஊரை இணையக்கவும் இணைந்து செயலாற்றவும் எமது எதிர்காலச் சந்ததியினரின் கணனி ஆழுமையை உயர்தும் நோக்கிலும் முன் எடுக்கப்பட்டு இன்று அம்மன் ஆசியோடு மூன்று வாசிகசாலை நிர்வாகத்தினரிடமும் அம்மன் ஆலயத்திருவிழாவில்வைத்து முறையே ஒவ்வொரு கணனிகள் முதல் கட்டமாக வழங்கப்பட்டது.
இதற்கு ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் நன்றிகள். இது போன்ற நற்பணிக்கு உதவிக்கரம் நீட்டவோ அன்றில் இணைந்து செயல் வடிவம் கொடுக்கவோ ஆர்வலர்கள் எம்மோடு இணைந்து செயலாற்ற கரம் கூப்பி அழைக்கிறோம்.
இது ஒரு தனிப்பட்டவர் சம்மந்தப்பட்ட விடையமல்ல அவனது? இவனது? என்ற பிரிவினை இல்லாது எமது ஊரின் சிறப்புப்பணிக்காய் தோன்றியது என்பதை உணர்வோம். சிறுப்பிட்டி உலகத்தமிழர் ஒன்றிம் இது முழு சிறுப்பிட்டி மக்களின் ஒற்றுமையுடன் கூடிய நலனில் அக்கறை கொண்டு நடைமுறை செயல் பாட்டுடன் உலாவரும் . இணையுங்கள் இருக்கும் போது ஊரின் சிறப்புக்காய் உழைப்போம். அந்த உழைப்பால் எதிகாலச் சந்ததிகள் சிறக்கும்.
சிறுப்பிட்டி உலகத்தமிழர் ஒன்றியத்தினரின் இந்த முதல்கட்ட செயல்பாட்டுக்கு ஒத்துழைப்பு அளித்த கோவில் நிர்வாகத்தினருக்கும் குறிப்பாக இதன் சிறப்புக்காய் மண்ணில் இருந்து செயல் புரிந்த பொதுநலத் தொண்டன் ஸ்ரீ அண்ணருக்கும் பொதுநலத்தொண்டர்கள் திரு.கோடிஸ்வரன் அவர் துணைவியார் அருந்தவதேவிக்கும் , இளைதொண்டன் தம்பி சுரேனுக்கும் எங்கள் சார்பில் நன்றிகள்.
இணைவோம் பலம்வரும்
சிந்திப்போம் பலன் வரும்
செயல்படுவோம் பயன் வரும்
பின்குறிப்பு :சிறுப்பிட்டி உலகத்தமிழர் ஒன்றியத்தின் எதிர்கால முன்னெடுப்புக்கள், அதன் கட்டுமானங்கள், நிர்வாகத்தினரின் அங்கத்தவர் விபரங்கள் , தொடர்புகளுக்கான வழிவகைகள் ,கிராமத்தில் இருக்கும் செயல் செயல்பாட்டாளர்கள் விபரம் போன்ற முக்கிய தகவல்கள் விரைவில் அறியத்தரப்படும்