நுவரெலியா நகரில் கொட்டித்தீர்த்த மழையால் வெள்ளத்தில் மூழ்கிய வீதிகள்; அவதியில் மக்கள்
நுவரெலியா நகரில் தற்போது நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
நுவரெலியாவில் இன்று(23.10.2021) பிற்பகலில் பெய்துவரும் கடும் மழையால் நுவரெலியா கந்தபளை பிரதேசத்தில் அதிகமான விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் வர்த்தக நிலையங்களில் வெள்ள நீர் புகுந்ததால் வியாபாரமும் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் வாகனச் சாரதிகள் பனி மூட்டம் மற்றும் மழையுடனான காலநிலை நிலவும் போது தமது வாகனங்களின் முகப்பு விளக்குகளை ஒளிரச் செய்தவாறு பயன்படுத்துவதன் மூலம் விபத்துகளை தவிர்த்துக் கொள்ளலாம் என நுவரெலியா போக்குவரத்து பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.