சூடானில் ஆட்சி கவிழ்ப்பு முயற்சி – பிரதமர் சிறைபிடிப்பு

சூடானில் ராணுவம் ஆட்சி கவிழ்ப்பு முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

சூடான் வட ஆப்பிரிக்காவில் அமைந்துள்ளது. இந்நாட்டில் 1989 முதல் 2019 வரை ஒமர் அல்-பஷீர் அதிபராக செயல்பட்டார். அதன் பின்னர் மக்கள் போராட்டம் மற்றும் ராணுவ கிளர்ச்சியையடுத்து ஒமர் அல்-பஷீர் சூடான் அதிபர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். இதனை தொடர்ந்து பொதுமக்கள் மற்றும் ராணுவம் கலந்த கூட்டணி அரசு சூடானில் ஆட்சியமைத்தது. இந்த ஆட்சியில் அப்துல்லா ஹம்டோ சூடான் பிரதமராக செயல்பட்டு வருகிறார்.


இந்நிலையில், சூடானில் கூட்டணி ஆட்சிக்கு எதிராக ராணுவத்தினர் இன்று ஆட்சி கவிழ்ப்பு முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களை ராணுவத்தினர் சிறைபிடித்துள்ளனர். மேலும், ஆட்சி கவிழ்ப்புக்கு ஒத்துழைப்பு அளிக்காததால் பிரதமர் அப்துல்லா ஹம்டோவையும் ராணுவத்தினர் சிறைபிடித்துள்ளனர். 

இந்த நடவடிக்கைகளால் மக்கள் வீதிகளில் இறங்கி போராடி வருகின்றனர். இதனால், சூடான் முழுவதும் இணையதள சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளது. மேலும், தலைநகர் ஹர்டோமுக்கு செல்லும் சாலைகள் அனைத்தும் முடக்கப்பட்டுள்ளது. ராணுவத்தின் ஆட்சி கவிழ்ப்பு முயற்சியால் சூடானில் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert