செல்வராஜா கஜேந்திரனுக்கு கொரோனாத் தொற்று
அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் தேசிய பட்டியல் பாரளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரனுக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
நேற்று அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையின்போதே அவருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்ட தகவலை அவரே இன்று காலை தனது முகப்புத்தகத்தில் அவர் இந்த தகவலை உறுதிபடுத்தியுள்ளார்.
இந்த வாரம் இடம்பெற்ற பாராளுமன்ற கூட்டத்தொடரில் அவர் பங்கேற்று இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.