இத்தாலியில் இரு மகள்களைக் கொன்ற தாய்!!
இத்தாலியின் வெரோனாவில் உள்ள மம்மா பம்பினோ Mamma Bambino பகுதியில் வசிக்கும் இலங்கைத் தாய் ஒருவர் தனது 11 மற்றும் 3 வயது மகள்களைக் கொன்று விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கொலை செய்யப்பட்ட இரண்டு குழந்தைகளின் உடல்கள் வீட்டில் இருந்த வேறொருவரால் அவர்களது படுக்கையில் கண்டெடுக்கப்பட்டதாக வெரோனா காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
சம்பவம் தொடர்பில் சந்தேகிக்கப்படும் பெண் பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளதுடன், அவர் ஏதேனும் மனநோயால் பாதிக்கப்பட்டுள்ளாரா என்பது தொடர்பில் இத்தாலிய காவல்துறையினர் விசேட கவனம் செலுத்தி வருகின்றனர்.
தலைமறைவாகியுள்ள தாயைக் காவல்துறையினர் தேடிவருகின்றனர்.
இலங்கையை பூர்வீகமாக கொண்ட 33 வயதுடைய சச்சித்ரா நிசன்சலா பெர்னாண்டோ தேவ்த்ரா மஹவடுகே என்பவர் தனது சாபதி (11 வயது) மற்றும் சாந்தனி (03 வயது) மகள்களுடன் ஜனவரி மாதம் முதல் இத்தாலியில் வெரோனா நகரத்தில் வசித்து வந்துள்ளார்.
வெனிஸ் சிறுவர் நீதிமன்ற உத்தரவின் கீழ் இரு பிள்ளைகளும் அவர்களின் தந்தையிடமிருந்து பிரிந்து தாயுடன் வசித்து வந்துள்ளார்கள்.
இந்நிலையில், நேற்று காலை குறித்த இரு பிள்ளைகளும் அவர்களின் தாயால் கொலை செய்யப்பட்டுள்ளனர். இதையடுத்து குறித்த தாய் தற்போது தலைமறைவாகியுள்ளார்.