ஒன்றாக இணைவோம்
புலரும் பொழுதே
புலரும் பொழுதே
தமிழ் ஈழம் புலரும்
நாள் வருமா
உலகம் முழுதும்
நாங்கள் நின்றே
உரிமை கேட்டு
பார்க்கின்றோம்
உயர்த்தி குரல்கள்
ஒலிக்க நாங்கள்
உரிமை கேட்டு
கதறுகிறோம்
முடிவும் இல்லை
விடிவும் இல்லை
எனினும் நாங்கள்
சோரவில்லை
தமிழர் வீரம்
தரணி பேசும்
தடைகளை
உடைப்போம்
எழுந்துவா
தரணித் தமிழர்
இணைந்தால் போதும்
தமிழ் ஈழம் மலரும் இணைந்துவா
இணைவோம் கரங்கள்
இனியேன் தயக்கம்
எழுவோம் புலரும் தமிழீழம்
விடிவின் பாதை தெரியுது தெரியுது
இனி விரைந்தே இணைந்திடு கரங்கள் தன்னை!
ஆக்கம் இசைக்கவிஞர் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா
கருவான திகதி 01.08.2021 உருவான நேரம் காலை12.20 மணி