திருமணம் !
அன்பிலே உருவாகி
ஆனந்த தேர் ஏறி
காதல் எனும் கனவு உலகத்திலே
கரை தெரியாமல்
புரண்டு ஓடும் கற்பனை
ஆயிரம் கொண்டதே காதல்
திருமணம் நடக்குமா?
இருகரம் இணையுமா?
என்பது தெரியாமல்
இருமனம் காண்கின்ற
இன்ப உலகம் காதல்
இருமனங்கள் இணைந்த காதல்
திருமணமும் ஆகிடவே
இல்லறத்தில் இணைந்து கொள்வோர்
நல்லோர்கள் ஆசியுடன்
இவர்கள் நல்வாழ்வு தொடரும்
இதுவே இறைவன் வரம் தந்த காதல் வாழ்கை!
ஆக்கம் இசைக்கவிஞர் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா
கருவான திகதி 14.01.2022 உருவான21 19மணி