உன்மைக்காதல் !

நாலு இடம் பார்த்து
நல்லதொரு கலர்பார்த்து
என்னை உனக்குப் பிடித்ததனால்
உன் வசம் ஆக்க எண்ணி கொண்டாய்
!

காசு செலவு போனாலும்
கண்ணுக்கு அழகுதேடி
காண்போர் பார்க்கும்போது
எனைப் பற்றி பேசவேண்டும் என்று
கைகளால் தொட்டு என்னை
கதவுதன்னை திறந்து நீயூம்
கால் எடுத்து பக்குவமாய்
என்மடியில் அமர்ந்து
கொண்டு
அழைத்துச் சென்றாய் உன் வீடுநோக்கி !

உற்றாரும் உறவுகளும்
எனைப்பார்க்க வந்திருக்க
ஊர்மக்கள் என் அழகை
புகழ்து தான் பேசி நிற்க
புகுந்தேன் உன்னிடம்
தஞ்சமே என்வாழ்வு
மகிழ்தேன் உன்னிடத்தில்
தஞ்சமாய் ஆனதர்க்கு
இணைந்தோம் நாம் இருவர்
இன்ப உலாக்கானலாம் என்றும் !

ஆக்கம் இசைக்கவிஞர் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா

கருவான திகதி 24.01.2023 உருவான நேரம் இரவு 21.01 மணி

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert