துாங்கிட முடியுமா!
எதிர்காலம் உந்தன் கையில்
எடுத்துச் சொல் நல்ல வழியில்
கடிவாளம் உந்தன் கையில்
கடமைகள் உண்டு உந்தன் பையில்
தொலை துாரப் பயணத்தில்
தொலைத்த எம் தேசத்தை
அழித்த கொடியோரை
மறக்கவும் நினைக்காதே
மறந்தும் அதை செய்யாதே
கொடுமைகள் அரங்கேறும்
அடிமைகளாய் நாம் வாழும்
தலைவிதி இது என்று
நாம் துாங்கிட முடியுமா தமிழா ?
எல்லை கடந்து வந்து
எம் மண்ணில் சிலை வைக்க
எம் இனத்தோர் பார்த்து நின்றால்
தொல்லை வரும் பின்னே
துரத்திவை அவன் செயலை
கொல்லை வழி வந்தோர்
எம் இனம் அழித்தோர்
ஆண்டிட எம் மண்ணை
நீ விடலாமா தமிழா
விடுதலை நோக்கி
விரைந்து செல்வோம்
ஓடி நீ வா!!!
ஆக்கம் இசைக்கவிஞர் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா
கருவான திகதி 12.01.2022 உருவான நேரம் 16.25மணி