எழுதுகிறேன் காதலனுக்கு ஓர் கடிதம்
எழுதுகிறேன் காதலனுக்கு
ஓர் கடிதம்
இதயத்தில் அன்பை வளர்த்து
என் இளமையை பறிகொடுத்து
இதயத்தில் கவலையை தூண்டி
விட்டுச் சென்றவனே வருவாயா
என் இதயத்தில் வைத்த அன்பை
நேசித்து வாசல் தேடி
கருவாக இதயத்தில் காதலை
உருவாக்கி என் பக்கத்தில் நின்று
கண்விழித்து கதைபேசி
உரையாடி நின்றவனே
கணையாளி தனை மாட்டி
கரம் பிடித்து வாழ்வோம் என
கன்னி நான் எதிர்பார்த்து நிற்க்க
சென்று விட்டாய் தொலைதூரம்
எழுதுகிறேன்
உனக்கு ஓர் கடிதம்
உனை நினைத்து உள்ளம்
ஏங்குகையில் இங்கே தடுமாற்றம்
அன்பாக காதல் கொண்டவனே
உன் பிரிவால் மனக்குழப்பம்
தனிமைக்கு இனி நான்
துணை போக முடியாத ஏக்கம்
அன்பு என்னும் காதலி என்னை உன்
இதயத்தில் நிறுத்தி
என் கழுத்தில் நீ
தாலிஅணிந்தால் அது போதும் நான்
வந்திடுவேன் உன் அருகில் வாழ!
ஆக்கம் இசைக்கவிஞர் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா
கருவான திகதி 17.09.2022 உருவான நேரம் காலை13.31 மணி