மனிதன் வாழ்க்கை பொய்யடா
மனிதன் வாழ்க்கை பொய்யடா
வாழ்ந்து பார்த்தால் தெரியுதடா
இரவும் தோன்றி பகலும் வந்தால்
இவனின் கதையும் விளங்குமடா
தூங்கும் போது தெரியவில்லை
மனதிலுள்ள நினைவுகளும்
எழுந்தபின்னே புரிந்த தடா-அவன்
இதயத்துடிப்பும் இருந்ததடா (2)
மண்ணில் ஏதும் சொந்தமில்லை
மாடி மனையும் சொந்தமில்லை
உன் உறவும் உனது இல்லை
உயிர் போனால் போன பின்னே உடலும் இல்லை
மார்பில் வளர்த்த அன்னை கூட- நீ
மடியும் போது வரமாட்டாள்
மாலை அணிந்த மனையாளும்
மண்ணில் புரண்டு அழுதிடுவாள்
மண்ணில் ஏதும் சொந்தமில்லை
மாடி மனையும் சொந்தமில்லை
உன் உறவும் உனது இல்லை
உயிர் போனால் போன பின்னே உடலும் இல்லை
இசைக்கவிஞன் சிறுப்பிட்டி எஸ் தேவராசா
உருவானகாலம் 1982