கலைத்தாயின்மகன்கலைஞர் தயாநிதி கலைப் பிரியன். சிறுப்பிட்டி தேவா..பற்றி

எஸ்.ரி.எஸ் இணையத்தளத்தின்
ஆசிரியன்.
இலாப நோக்கமற்ற
செயல் வேந்தன்.
ஈழத்துக் கலைஞர்களுக்கு
களம் அமைத்த காவலன்.

இசை அமைப்பாளன்.
இறுவெட்டுக்கள் பலவற்றை
வெளியிட்ட இசைஞன்.
யேர்மனியிலும் தாயகத்திலும்
ஆலயங்களுக்கு பக்தி பாமாலை
உருவாக்கிய ஆன்மீகன்..

ஆறுவருடங்களுக்கு மேலாக
இணையத்திலும் சாதனை
இப்போது இணைய வழி
தொலைக்காட்சியையும் எம்வர்க்காக
இயக்கி வரும் ஆர்வலன்.

அரங்க ஒலி அமைப்பில்
நேர்த்தியான வித்தகன்
தொண்டனாகவும் ஈழ மக்களின்
பணியாளனாகவும்
இயங்குவது கண்கூடு.

பாதிக்கப் பட்ட போராளிக்
கலைஞர்களையும் போராளிகளையும்
வாழ வைத்திடும் செயல் திட்டங்களில்
தீவிரமானவன். வணக்கம் ஐரோப்பா
நெஞ்சம் மறக்குமா எனும்
கலை நிகழ்வின் வெற்றிகளுக்கு
பின்னால் நின்று உழைக்கும்
உன்னதன் .இவனை வாழ்த்தி
வரவேற்போம் வாருங்கள்…

18.10.2017

கலைஞர் தயாநிதி

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert