Remove Followers அம்சத்தை அறிமுகம் செய்த ட்விட்டர்: எப்படி பயன்படுத்துவது?

மீபத்தில் இந்நிறுவனம் ஃபாலோயரை

ட்விட்டர் தளத்தை இந்தியாவில் அதிக மக்கள் பயன்படுத்துகின்றனர் என்றுதான் கூறவேண்டும். குறிப்பாக இந்த தளத்தில் அனைத்து தகவல்களையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள முடியும். அதேபோல் இந்த ட்விட்டர் தளத்தில் பல்வேறு புதிய அம்சங்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன.

அதன்படி சமீபத்தில் இந்நிறுவனம் ஃபாலோயரை லிஸ்ட்டிலிருந்து அகற்ற உதவும் Remove this follower எனும் அம்சத்தைகொண்டுவந்துள்ளது. அதன்படி இந்த அம்சத்தை பயன்படுத்திய பிறகு உங்கள் ட்விட்கள் ஆட்டோமேட்டிக்காக நீக்கப்பட்டவரின்ட்விட்டர் டைம் லைனில் தெரியாது என்பது குறிப்பிடத்தக்கது.

வெளிவந்த தகவலின்படி இந்த புதிய அம்சம் தற்சமயம் வெப் வெர்ஷனில் பயன்படுத்தும் ட்விட்டருக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல் இந்த புதிய அம்சம் ஃபாலோயர்ஸை முற்றிலும் பிளாக் செய்யாமல், அவர்களை ஃபாலோயர் லிஸ்ட்டில் இருந்துநீக்க யூஸர்களை அனுமதிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ட்விட்டர் நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்ட தகவல் என்னவென்றால், இந்த புதிய அம்சத்தை பயன்படுத்தி ஒரு யூஸர் அகற்றும் ஃபாலோயருக்கு இது தொடர்பான நோட்டிபிகேஷன்கள் எதுவும் காட்டப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இந்த அம்சம் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும் என்றுதான் கூறவேண்டும். மேலும் இந்த புதிய அம்சத்தை பயன்படுத்தும் வழிமுறைகளைப் பார்ப்போம்.

வழிமுறை-1

ட்விட்டர் தளத்தில் உங்களது ப்ரொஃபைல் பேஜ் சென்று Followers-ஐ என்பதை கிளிக் செய்யவும்.

வழிமுறை-2

அடுத்து நீங்கள் எந்த ஃபாலோயரை ரீமூவ் செய்ய விரும்புகிறீர்களோ அவரது பெயருக்கு அடுத்து காணப்படும்Remove this follower தேர்வு செய்ய வேண்டும்

வழிமுறை-3

அதன்பின்பு ஃபாலோயரை லிஸ்ட்டிலிருந்து அகற்ற உதவும் Remove this follower என்பதை கிளிக் செய்ய வேண்டும். இந்த அம்சத்தை நீங்கள் செயல்படுத்திய பின்னர் உங்கள் ட்விட்கள் ஆட்டோமேட்டிக்காக நீக்கப்பட்டவரின் ட்விட்டர் டைம் லைனில் தெரியாது என்பது குறிப்பிடத்தக்கது.

வழிமுறை-4

ட்விட்டர் தெரிவித்துள்ள தகவலின்படி, நீங்கள் ரீமுவ் செய்த ஃபாலோயர்ஸுக்கு, அவரை உங்கள் ஃபாலோயர் லிஸ்ட்டில்இருந்து தூக்கியதற்கான அறிவிப்புகள் ஏதும் காட்டப்படாது. இன்னும் சுருக்கமாக கூறவேண்டும் என்றால் இந்த புதிய அம்சம் பெரிய ஃபாலோயர்ஸ் லிஸ்ட் கொண்டுள்ள அதே சமயம் அவர்களை முற்றிலும் பிளாக் செய்ய விரும்பாதயூஸர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

ட்விட்டர் தளத்தை போன்றே பேஸ்புக் தளத்தையும் அதிக மக்கள் பயன்படுத்துகின்றனர். இந்த தளத்தில் தனசரி செய்திகள்,தகவல்கள், வேலைவாய்புகள் உள்ளிட்ட அனைத்தையும் எளிமையாக தெரிந்துகொள்ள முடியும். மேலும் சமீபத்தில் பேஸ்புக் நிறுவனம் இந்தியாவில் உள்ள சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோர்களுக்கு தொழில் கடன் வழங்க உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது இதற்காக ஆன்லைன் மூலம் கடன் வழங்கும் இண்டிஃபை நிறுவனத்துடன் இணைந்துள்ளது பேஸ்புக் நிறுவனம். பின்புஇதனை இண்டிஃபை நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் அஜித் மோகன் உறுதி செய்துள்ளார் என்பதுகுறிப்பிடத்தக்கது.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert