கிளாஸ்கோ பருவநிலை மாநாட்டில் ராணி இரண்டாம் எலிசபெத் பங்கேற்க மாட்டார்
டாக்டர்கள் அளித்த பரிந்துரையை ஏற்று, இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் கடந்த வாரம் அயர்லாந்து பயணத்தை ரத்து செய்தார்.
இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் (95), கடந்த வாரம் வழக்கமான சோதனைகளுக்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மருத்துவனையில் தங்கினார். அதன்பின் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வின்ஸ்டர் கோட்டைக்குத் திரும்பி ஓய்வெடுத்து வருகிறார்.
இந்நிலையில், ராணி இரண்டாம் எலிசபெத் கிளாஸ்கோவில் நடைபெறும் பருவநிலை மாநாட்டில் பங்கேற்க மாட்டார் என பக்கிங்ஹாம் அரண்மனை தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக, பக்கிங்ஹாம் அரண்மனை வெளியிட்டுள்ள அறிக்கையில், ராணி இரண்டாம் எலிசபெத் நன்கு ஓய்வெடுக்க வேண்டும் என மருத்துவர்கள் ஆலோசனை வழங்கியுள்ளனர். அதைக் கருத்தில் கொண்டு நவம்பர் 1ம் தேதி கிளாஸ்கோவில் நடைபெற உள்ள பருவ நிலை மாநாட்டில் ரானி இரண்டாம் எலிசபெத் கலந்து கொள்ள மாட்டார் என தெரிவித்துள்ளது.