நீங்கள் புறக்கணிக்கக் கூடாத அறிகுறிகள்
ஆரோக்கியமான உடல் என்பது அனைவரின் கனவாகும். ஆனால் அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும், பராமரிப்பையும் நாம் செய்கிறோமா என்றால் நிச்சயம் இல்லை என்றுதான் கூற வேண்டும். நமது உடலுக்கு மிகப்பெரிய எதிரியே நாம் ஆரோக்கியத்தின் மீது காட்டும் அலட்சியம்தான்
நாம் அடிக்கடி புறக்கணிக்கும் சில பொதுவான அறிகுறிகள் மிகவும் தீவிரமான ஆரோக்கிய பிரச்சினையைக் குறிக்கலாம். இந்த அறிகுறிகள் சாதாரணமானதாக தோன்றினாலும் உண்மையில் அவை நமக்கு மிகவும் ஆபத்தானவையாக மாறக்கூடும். நீங்கள் புறக்கணிக்கக் கூடாத அறிகுறிகள் என்னென்ன என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
திடீர் எடை இழப்பு
உடல் எடையை குறைப்பது என்பது ஆரோக்கியமான ஒன்றுதான். ஆனால் நீங்கள் எடையை குறைக்க முயற்சிக்காமலேயே 6 மாதங்களில் உங்கள் எடையில் 10 சதவீதத்திற்கு மேல் உடல் எடையை குறைவது நீங்கள் கவலைப்பட வேண்டிய ஒன்றாகும்.
மனநிலை மாற்றங்கள்
அடிக்கடி மனநிலையில் மாற்றங்கள் ஏற்படுவது பைபோலார் டிஸார்டர், டிஸ்டைமியா,ஆபத்தான மனநிலை சீர்குலைவு போன்ற தீவிரமான மனநலப் பிரச்சினைகளை நோக்கிச் செல்கிறது. இது உங்களுக்கு மட்டுமின்றி மற்றவர்களுக்கும் ஆபத்தை ஏற்படுத்தும்.
தலைவலி
குறுகிய கால தலைவலி, இரவில் தலைவலி, அதிகாலையில் மோசமடைகிறது மற்றும் வலி நிவாரணிகளுக்கு குணமடையாதது போன்ற தலைவலிகள் காய்ச்சலுடன் சேர்ந்து கட்டி அல்லது மூளைக்காய்ச்சல் போன்ற கடுமையான கோளாறின் அறிகுறியாக இருக்கலாம்.
சோர்வு
தொடர்ச்சியான பலவீனம் மற்றும் சோர்வு நாள்பட்ட சோர்வு நோயின் அறிகுறியாக இருக்கலாம். சரியான தீர்வைப் பெற மருத்துவரை உடனடியாக சந்திக்கவும்
தொடர்ச்சியான இருமல்
தொடர்ச்சியான இருமல், எடை இழப்பு மற்றும் குறைந்த அளவு காய்ச்சல், தீவிர நோயின் அறிகுறியாகவும் இருக்கலாம். இது காசநோய் அல்லது புற்றுநோயாக இருக்கவாய்ப்புள்ளது, உண்மையான காரணத்தை தெரிந்து கொள்ள மார்பு எக்ஸ்ரே செய்யப்பட வேண்டும்.
மார்பு வலி
நீங்கள் மார்பில் திடீரென அழுத்தம், இறுக்கம் அல்லது மார்பகத்தின் கீழ் நசுக்குவதை உணர்ந்தால். உங்கள் தாடை, இடது கை அல்லது முதுகில் பரவும் வலி, மாரடைப்பாக இருக்கலாம். இந்த அறிகுறிகளை ஒருபோதும் புறக்கணிக்காதீர்கள்.
தொடர்ச்சியான காய்ச்சல்
தொடர்ந்து குறைந்த தர காய்ச்சல் நாள்பட்ட நோய்த்தொற்றின் அறிகுறியாக இருக்கலாம். இது எடை இழப்பு, மூட்டு வலி அல்லது வயிற்று வலி ஆகியவற்றுடன் ஏற்பட்டால், அது தொற்று அல்லது அழற்சியின் அறிகுறியாக இருக்கலாம்.
மெதுவாக குணமடைதல்
காயங்கள் ஏற்பட்டால் அவை விரைவில் ஆறிவிடும். ஆனால் இதற்கு மாற்றாக காயங்கள் ஆற நீண்ட காலம் எடுத்துக் கொண்டால் அது ஏதாவது குறைபாட்டின் அறிகுறியாக இருக்கலாம். பொதுவாக நீரிழிவு செல்கள் மெதுவாக மீளுருவாக்கம் செய்ய வழிவகுக்கும், இதனால் குணப்படுத்தும் செயல்முறை மெதுவாக இருக்கும்.