காலைவேளை கட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானம் –
இந்தியா மற்றும் இலங்கையை இணைக்கும் மற்றுமொரு விமான சேவையான விஸ்தாராவின் ஆரம்ப விமானம் நேற்று காலை கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது.
இந்தியாவின் புது டெல்லியில் இருந்து விஸ்தாரா ஏர்லைன்ஸ் விமானம் 138 பயணிகளுடன் காலை 10.10 மணியளவில் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது.
இந்த விமான சேவை தற்போது வாரத்தில் மூன்று நாட்கள் இந்தியாவின் புது டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் மற்றும் இலங்கையின் கட்டுநாயக்காவில் உள்ள பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் ஆகியவற்றிற்கு இடையே இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.