இருளில் வடகிழக்கில் பலகுதி !
இலங்கையில் இன்றைய தினம் நாடளாவிய ரீதியில் ஏற்பட்ட மின்தடை தொடர்பில் குற்றப்புலனாய்வு பிரிவு விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
பிரதான மின் கட்டமைப்பில் இன்று திடீரென ஏற்பட்ட கோளாறு காரணமாக நாடளாவிய ரீதியில் மின்தடை ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றன.
நாட்டில் தடைப்பட்டிருந்த மின் விநியோக நடவடிக்கைகள் 6 மணித்தியாலங்களின் பின்னர் வழமைக்கு திரும்பியுள்ளதாக கூறப்பட்ட போதிலும் வடகிழக்கில் மின்துண்டிப்பு தொடர்கின்றது!