ஐபோன் 5ஜி வசதியுடன் உருவாகும் ஆப்பிள் நிறுவனம்
ஆப்பிள் நிறுவனம் குறைந்த விலையில் அறிமுகம் செய்ய இருக்கும் புதிய ஐபோன் மாடல் விவரங்கள் வெளியாகி இருக்கிறது.
ஆப்பிள் நிறுவனம் புதிய ஐபோன் எஸ்.இ. மாடலை உருவாக்கி வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களில், புதிய மூன்றாம் தலைமுறை ஐபோன் எஸ்.இ. மாடல் அடுத்த ஆண்டின் முதல் காலாண்டு வாக்கில் அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது.
2022 முதல் காலாண்டில் புதிய ஐபோன் எஸ்.இ. அறிமுகம் செய்வது மட்டுமின்றி ஆண்டின் இரண்டாவது அரையாண்டில் நான்கு மாடல்களை ஆப்பிள் அறிமுகம் செய்ய இருக்கிறது. புதிய ஐபோன் எஸ்.இ. மாடல் மிட்-ரேன்ஜ் பிரிவில் 5ஜி கனெக்டிவிட்டி கொண்டிருக்கும் என தெரிகிறது. வரும் ஆண்டு ஆப்பிள் நிறுவனம் 2.5 கோடி முதல் 3 கோடி யூனிட்களை உற்பத்தி செய்ய திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது
புதிய ஐபோன் எஸ்.இ. மாடலில் 4.7 இன்ச் டிஸ்ப்ளே, 5ஜி கனெக்டிவிட்டி, ஆப்பிள் ஏ15 பயோனிக் பிராசஸர் வழங்கப்படும் என கூறப்படுகிறது. இந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட ஐபோன் 13 சீரிஸ் மாடல்களில் ஏ15 பயோனிக் பிராசஸர் வழங்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.