மக்களுக்கு ஏற்ப்பட போகும் சிக்கல்
டொலர் தட்டுப்பாட்டின் காரணமாக நாடு முழுவதிலும் மீண்டும் பால் மாவிற்கு தட்டுப்பாடு ஏற்படும் நிலைமை ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நாடு முழுவதிலும் இறக்குமதி செய்யப்படும் பால் மா மற்றும் தேசிய பால் மா என்பவற்றுக்கு தட்டுப்பாடு நிலவி வருகின்றது.
இந்நிலையில்,இதற்கு முன்னர் இறக்குமதி செய்யப்பட்ட பால் மாவுக்கான கொடுப்பனவுகளை முறையாக செலுத்தாமையினால், வெளிநாட்டு பால் மா நிறுவனங்கள் புதிய கையிருப்புகளை அனுப்ப மறுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
தேசிய பால் மா விநியோகம் நடவடிக்கைகள் தொடர்பில் ஏற்பட்டுள்ள பிரச்சினை காரணமாக தேசிய பால் மாவுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.