அதிபர் ஜோ பைடனுக்கு பரிசாக அளிக்கப்பட்ட நாய்க்குட்டி
அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு புதிய நாய்க்குட்டி ஒன்று பரிசாக அளிக்கப்பட்டுள்ளது.
வெள்ளை மாளிகையில் புதிய உறுப்பினராக சேர்ந்துள்ள நாய்க்குட்டிக்கு கமாண்டர் என பெயரிட்டுள்ளதாகக் கூறி அதன் படத்தை அதிபர் பைடன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் நாய்க்குட்டியுடன் தான் பந்து வீசி விளையாடும் படக்காட்சியையும், வாக்கிங் செல்லும் காட்சியையும் இன்ஸ்டாகிராமில் அதிபர் பைடன் பதிவிட்டுள்ளார்.
இந்த நாய்க்குட்டியை ஜோ பைடனுக்கு பிறந்த நாள் பரிசாக அவரது சகோதரர் ஜேம்ஸ் பைடன் தந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. பைடன் அன்புடன் வளர்த்து வந்த சேம்ப் என்ற நாய் கடந்த ஜூன் மாதம் இறந்தது. அதற்கு பதில் புதிய நாய்க்குட்டி வெள்ளை மாளிகைக்கு வந்துள்ளது.
Meet the newest Biden. pic.twitter.com/JHAbH53iRk
— President Biden (@POTUS) December 20, 2021