மீண்டும் லண்டன் பயணமானார் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர்!
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியகலாநிதி த.சத்தியமூர்த்தி நேற்றுத் திங்கட்கிழமை(27.12.2021) மீண்டும் லண்டன் பயணமாகியுள்ளார்.லண்டனில் பயிற்சிக் கற்கைநெறியைப் பூர்த்தி செய்த பின்னர் சில மாதங்களில் அவர் மீண்டும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கடமைக்குத் திரும்பவுள்ளதாகத் தெரியவருகின்றது. அதுவரை தற்காலிகமாகப் பதில் பணிப்பாளர் ஒருவர் கடமைகளுக்காக நியமனம் செய்யப்படவுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.