எவரும் மதியார்!

இந்த உலகம் உனதல்ல
இளமை வயது நிலையல்ல
கந்தை கட்டி வாழ்ந்தவனும்
காசுக்கு மேல் படுத்தவனும்
கடைசியில் போகுமிடம் ஒன்றே!

நல்ல செயலும் நற் பண்பும்
என்று ஒன்றே
சிந்தை மகிழ நீ செய்
சிலகால இவ்வாழ்வில்
நீ வாழ்ந்த வாழ்கை
சில சனம் என்றாலும் போற்றும்

இல்லாத பகட்டும்
இடை வந்த பணமும்
காணாதோர் கண்டதால்
பொல்லாத பகட்டை
புகழ் என்று எண்ணி
புலம்பி நிற்போரை
எவரும் மதியார்

ஆக்கம் இசைக்கவிஞர் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா
கருவான திகதி 15.01.2022 உருவான நேரம்12 .38 மணி

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert