வரலாறு கண்டவன் தமிழ் வீரனே!

வீறு கொண்டெழு
விரைந்து நீ எழு
விடிவின்றி-உலகிலே
இருலோதடா
வீரனாய் எழு
விடுதலை பெற
வழி கண்டு நீ சென்று
வாழ்வாயடா!

ஆ‌ழ்பவன் ஆழ்வான்
அடிமையாய் ஆழ்வான்-அந்த
அடிமையின் கொடுமையில்
நீவாழ்வதா ?
ஆச்சிகள் மாறும்
சூட்சிகள் யாவும்
அதைக் கண்டு
நீ இன்னும் கண்மூடவா
துயர் கொண்ட மனம் மகிழ
விடுதலை தேடு
சுதந்திர தாகத்தை
சுவாசித்து வாழு
எழு வீரம் கொண்டு
எது வந்த போதும்
இனியேனும் சுதந்திரம்
நீ கண்டு வாழு!

கருமேகம் சூழும்
மழைவரத்தானே
கதிர் ஒளி தோண்றும்
அதி காலைதானே
வரலாறு கண்டவன்
தமிழ் வீரனே
வையகம் புகழ் வாழ்ந்த
தமிழ் வீரனே
கரிகாலன் அதை செய்தான்
களமாடி எமைக்காத்தான்
புவியாவும் புகழ்பாடும்
புது வேதமே
புவனத்தில் அவன் வாழ்வு
ஒளிவீசுமே!

ஆக்கம் இசைக்கவிஞர் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா
கருவான திகதி 16.06..2022 உருவான நேரம்
14 26 மணி

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert