ஒன்று படமுடியாத உறவுகள் !
அன்பினில் பூத்து
அணைப்பில் இணைந்து
இன்பத்தை சுமந்து
இனிய காதல்
பெற்றவர்கள் காதில் வர
பிணைகள் பட்டு
ஒருவாறு ஒத்து ஒன்றாகி
பந்தல் இட்டு
பல சொந்தங்களையும்
சுற்றத்தையும்
பண்போடு அழைத்து
ஜயர் வந்து
அக்கினியை சாட்சி வைத்து
இருமனம் இணைந்த
திருமணம் கண்டு
இன்புற்ற உறவுகள்
பின் சில காலம் செல்ல
பிடுங்கல்கள் தொடங்கி
அன்புற்ற காதல் மறந்து
அரவணைத்த கரத்தை துறந்து
இருவருக்குள் தொடங்கிய
இடைவிடா சண்டையில்
இல்லத்தில் மகிழ்வு போக
இல்லறத்தில் விரிசல் பட்டு
இழக்கப்பபட்டது
இருவரின் வாழ்வு?!
காதலின் பின் திருமணம்
கலங்கிய வாழ்வாகுது ஏன்?
கடவுள் குற்றமா ? காதல் குற்றமா?
ஆக்கம் இசைக்கவிஞர் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா
கருவான திகதி 17.06..2022 உருவான நேரம் 01 .34 மணி