கண்ணில் எழில் காட்சி!

காலைச் சூரியன்
கண்ணில் எழில் செ ழி க்க
காட்சி தந்து நின்றான்
கதிரவனே—-
!

இயற்கையின் படைப்பிது விந்தை-கண்கள்
இன்பமாய் இரசிப்பதும் விந்தை!
கத்தில் படைப்புகள் விந்தை !
ஊர்வதும் நடப்பதும் விந்தை !
இத்தனைஅழகுகொண்டு !
உதயமாகி உன் எழிலில் நீ
உடையாய் உடுத்தி வர்ணத்தை
உனதாயாக்கி உன்
எழில் அழகை !
உலகுக்கு கொடுப்பதும் நல் ஒளியே !

மறைவிலும் தருகிறாய் மன மகிழ்ச்சி
மங்கிடும் மஞ்சளாய் எழில் கவர்ச்சி
மங்கையில் முகத்தில் மஞ்சள் போல
மலர்வதால் உலகமே ஒளி விளக்கில் -நீ
உயர்வானில் உலவும் எழில் அழகி
உள்ளங்கள் மகிழ்ந்தி தினம் வருவாய்
ஒளியே கதிரே உன் பெயரே
உலகின் வனப்பில் நீ அழகே !
ஒளிதரும் கதிர் ஒளி உலகழகே !

ஆக்கம் இசைக்கவிஞர் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா

கருவான திகதி 09.02.2023 உருவான நேரம் இரவு 21.01 மணி

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert