ஆலயம் இல்லா ஊரில் குடியிருக்கவேண்டாம் என்ற முதியோர் கருத்து உண்டு,ஆனால் இன்று புலம் பெயர்வாழ்வுதனில் எமது ஊர் ஆலயச் சிறப்புச் செய்திகள் இணையப்பரப்பில் ஏன் உலகப்பந்தில் முக்கிய இடத்தை பிடித்து நிற்கிறது, அந்த வரிசையில் இலுப்பையடி முத்துமாரி அம்மன் ஆலயத்திருவிழா அலங்காரத்திருவிழா (27.03.2014)இன்று ஆறாம் நாள் திருவிழாவாக சுவாமி வீதி உலா வந்துள்ளார் இன்றைய உபயமாக சி.நடராசா -மல்லிகாதேவி குடும்பத்தினரின் திருவிழாவாக அமைந்துள்ளது, திரு.நடராசா அவர்கள் சுவிசில் வாழ்ந்து வருகிறார் இவர் அம்மன்மேல் அளவில்லா பக்தியுடையவர் இவர் தனது மனைவி, பிள்ளைகள் துணையோடு சிறப்புற அலங்காரத்திருவிழா நடந்தேறியுள்ளதாகத் தகவல் கிடைத்துள்ளது, எம் ஊர் இணையத்துக்காக எமது இணைப்பாளர் அம்மன் பக்தர் திரு.மயூரன் சிறப்பான தகவல் தந்தார்.
அம்மன் வருகிறாள் வீதியுலா
ஆயிரம் கண்கொண்ட தேவியுலா
அடியார் தோள்மேல் காவிவர
அந்தாதி பாடி பக்தர் அழைத்துவரவீதியுலா
முத்தைய துயர் எல்லாம் காத்தவள்-நீ
முத்தாய் வாழ்வமைத்து தந்தவள்-நீ
பக்தியோடு உந்தன் வாசல்வர-உன்
பார்வையால் துயர் தீர்க்கும் தேவியும்-நீ
வேண்டுதலை நிறைவேற்றும் நாயகியே
வேப்பிலை பிரிய நாயகியே
ஆண்டு தோறும் -நீ உலாவந்திடம்மா
அன்னையே அருள் தினம் தந்திடம்மா: