வாழ்வியலில் மனிதன் தன்னை மிஞ்சிய சக்தியை நம்புகிறான். அதை இறையருளாகப் பார்க்கப்படுகின்றது. அது இறை அருளின் வடிவாக சிறுப்பிட்டியில் அமர்ந்து எமை எல்லாம் ஆட்சி புரிகிறாள் முத்துமாரிஅம்மன் அலங்காரத்திருவிழாவால் அமைதிகொள்கிறாள் அம்மன் ஊர்களுக்கும். உலகுக்கும் அருள்புரிந்து நிற்கும் இலுப்பையடி முத்துமாரி அம்மன் ஆலயத்திருவிழா இன்று அலங்காரத்திருவிழா (28.03.2014)இன்று ஏழாம் நாள் திருவிழாவாக அம்மன் வீதி உலா வந்துள்ளார் இன்றைய உபயமாக வி.சுப்பிரமணியம்-மல்லிகாதேவி குடும்பத்தினரின் திருவிழாவாக அமைந்துள்ளது, மட்டுமல்ல புலத்தில்வாழும்இவர்கள் பிள்ளைகள் ஆதரவுடன் சிறப்புற்றதாக தகவல் கிடைத்துள்ளது, எம் ஊர் இணையத்துக்காக எமது இணைப்பாளர் அம்மன் பக்தர் திரு.மயூரன் சிறப்பான தகவல் தந்தார்.
அன்னையே உன்பதாம் பற்ற எம்மையே
ஆண்டிடும் தேவி-நீயம்மா
அன்புடன் மல்லிகா-மணியத்தின் பூயையால்
ஆனந்தம் கொண்டுள்ளாய் -நீயம்மா
புலத்திலே தரும் பலம்-உனக்கு
பூயைகள் அனுதினம்-தேவி
புண்ணியம் உன் அருள் கிட்டியதாலே
பலத்திலே குறையில்லையே.முத்துமாரி
ஊரையும் உறவைவும் நன்று வாழவை
உன் புகழ்பாடும் எம்மை ஆட்சிசெய்
அன்றாடம் வேண்யே நாம் தொழவே
ஆண்டு நின்றிடும் அருள்தேவியே