கிழக்குப் பல்கலைக்கழ பேராசிரியராகும் கலாநிதி.சின்னத்தம்பி.சந்திரசேகரம்
கிழக்குப் பல்கலைக்கழக மொழித்துறைத் தலைவரான கலாநிதி.சி.சந்திரசேகரம் பேராசிரியராக உயர்ந்திருக்கிறார் .வாழ்த்துகளுடன் நான்.சந்திரசேகரம் கிழக்குப் பல்கலைக்கழக கலை கலாசாரப் புலத்தின் முதல் தொகுதி மாணவர்களில் ஒருவர்.நம் மாணவர்கள் உயர் நிலை அடைவது நமக்கு மகிழ்ச்சியான செய்தியாக மனதை நிறைத்து நிற்கிறது .கிழக்குப் பல்கலைக்கழகம் அந்த பல்கலைக்கழகத்தில் படித்த மாணவர்களின் கைகளில் சிறப்புப் பெறும் காலமாய் உள்ள நாட்கள் இவை.நம் மண் சார்ந்த சிந்தனையுடன் செயல் படக் கூடிய செயல் திறன் மிக்கவர் கரங்களில் வளம் பெறும் உயர்கல்விப் பாரம்பரியம் .உலகில் முதல் தமிழ் பேராசிரியர் சுவாமி விபுலாநந்தர் கிழக்கு மண்ணிலிருந்தே உருவானார் அந்த வரிசையில் இன்று சந்திரசேகரம் மண்டூரின் தமிழ் அறிவுப் பாரம்பரியத்தின் தொடர்ச்சியாய் இன்று பேராசிரியராகி இருக்கிறார்.