என் வீட்டு முற்றம்!
திசை எங்கு சென்றபோதும்
தினமும் வரவும் போகவும்
உலவிடும் என் கால்கள்
தினம் பதிந்த இடம்
என் வீட்டு முற்றம்
சலனம் வந்தபோதும்
சந்தோசம் வந்தபோதும்
உலவில் உன்மேலே
உதித்திடும் புது சிந்தை தரும்
என் வீட்டு முற்றம்
குழந்தையாய் தவழ்ந்து
குடும்பமாய் கூடி நாம்
கும்மி விளையாடி
மகிழ்ந்து நின்ற இடம்
என் வீட்டு முற்றம்
மண் தந்த மணம் வீச
மல்லிகை பந்தலிட்டு-அந்த
தின்னையில் படுத்துறங்கி
தினம் கண்ட மகிழ்வதனை
இன்று என்னித்தான் மனம் ஏங்குதே
ஏக்கத்தால் வாடுதே!
ஆக்கம் இசைக்கவிஞர் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா
கருவான திகதி 15.06..2022 உருவானநேரம்13 06 மணி