அமரர் சின்னத்துரை நடராசா அர்களுக்கு எமது விழிநிர் துளிகள் யசோதரன் ரூபி குடும்பத்தினர் சுவிஸ்
அன்போடு கதைபேசி
அறிவுரை தான் கூறி
இன்பமாய் உரையாடிய-
நடராசா அண்ணா-உங்கள்
குரல் தான் ஊய்ந்ததோ அண்ணா
சிந்தையில் ஊர் நண்மை
சிறந்தட செயலாண்மை
சொல்லிலும் செயலிலும்
வல்லவன் நீங்கள் தானே
சொல்லாமல் உறக்கத்தில்
ஏன் அண்ணா ஆழ்ந்தீர்கள் !
உறவுகளும் அருகில்லை
உங்கனை கரம்பித்தவரும்
அருகில் இல்லை
உறங்கிடச் சென்றவரே
உயிர் துறந்து நீர்களோ
உறவுகளை மறந்துதான்
தனிவழியே சென்றீர்களோ!
உதிரமே உறைந்தது
உயிர் பிரிவுக் கேட்டு
விழிகளோ நீர் சொரிந்தது அண்ணா
உங்கள் உயிர் மறைவுகேட்டு இது
பெய்யாகக்கூடாதா -அண்ணா
சாவை புறம்தள்ளிவாராயோ
நீங்கள் செய்யச் சேவைகள்
நிறைய உண்டு பாராயோ
நெடுந்தூரத் பயணத்தால்
திரும்பி நீங்கள் வாறீரோ
அண்ணா விழிகளைத்திறந்திங்கு
ஒருகணம் வாறீரோ ?
வெள்ளை உள்ளம் கொண்டரோ
ஒருவார்தை பேசாயோ?
கண்ணீரை காணிக்கையாக்கி மலர்ப்பாதமிட்டோம்
உன் பிரிவால் வாடும் திரு .திருமதி யசோதரன் ரூபிகுடும்பத்தினர்(சுவிஸ்)