எம்மைபற்றி

S.Thevarasa

எனது பெயர் சுப்பிரமணியம் தேவராசா. நான் என் ஒன்பதாவது வயதில் இருந்து ஒலிப்பதிவுத்தறையுடன் பயணிக்கத்தொடங்கி கலைத்துறையிலும் (எழுத்துத்துறை .கவிதை இசையமைப்பாளர்)தொடர்ந்து இன்றுவரை பயணித்துக்கொண்டிருக்கிறேன். யேர்மனியில் முதல் தமிழ் ஒளிப்பதிவாளனாக .ஒலிப்பதிவாளனாக கடந்து வந்த பாதையில் இசை துறையிலும் கால் வைத்ததன் காரணமாக 12 இசைப்பேழைகளை இதுவரை வெளியிட்டுள்ளேன் . அத்தோடு நேர்வேயில் எனது நண்பர் வாஸ்கோ அவர்களின் இதயத்தில் பூத்த பூ என்ற முழுநீள திரைப்படத்துக்கு இசையுடன் பாடல்களும் எழுதியுள்ளேன் .அதற்காக அவர் எனக்கு இசைத்தென்றல் என்ற கௌரவத்தை வழங்கினார். அதன் பின் ரீச்சர் எனும் குறும் படம் என எனது பணிகளுடன் ஜந்து இணையத்தளங்களை நடாத்தி வருகின்றேன்.அவையாவன stsstudio.com,eelattamilan.stsstudio.com, eelaoli.stsstudio.com , STS Tami tv.stsstudio.com ,siruppiddy.stsstudio.com. என்பனவாகும்.

அத்துடன் என்னால் உருவாக்கப்பட்ட STS TAMIL TVஎன்ற தமிழ் தொலைக்காட்சி கடந்த 5 வருடங்களாக லைக்கா ஜபி ,சாலை ஜபி மூலமாக ஒளிபரப்பப்பட்டது .தற்போது ஈகில் ஜபி மூலமும் ,வீ ஜபி பெக்ஸ் மூலமும் தொடர்ந்து ஒளிபரப்பப்பட்டு வருகிறது.அந்தவகையில் எமது ஊருக்கான ஒரு தளம் தேவை என்ற நோக்கிலேயே siruppiddy.stsstudio.com என்ற இணைய தளத்தை உருவாக்கி இதை நடாத்தி வருகின்றேன் .இதில் நமது ஊர் மக்களின் சிறப்புகளை பதிவிடுவதோடு ஆலயங்களின் செய்திகள், ஊர் பெரியார்களின் தகவல்கள், ஊரில் உள்ளவர்களின் பிறந்தநாள்,துயர்பகிர்வு ஆகியவற்றுடன் இலங்கை ,இந்திய ,உலக செய்திகளையும் தாங்கி வலம் வரும் தளமாக இதை உருவாக்கியுள்ளோம். ஊர் வாழ் உறவுகள் உங்கள் தகவல்களை தந்தால் இதில் சிறப்புற இணைக்கப்படும்.
உங்களுக்கான இந்தத் தளத்தின் சேவை தொடரும் .

உங்கள் கவனத்திற்கு:

STS TAMIL TV

என்ற எழுத்தின் மேல் சொடுக்குவதன் மூலம் அதன் வலைதளத்திற்கு சென்று விபரங்களை பார்வையிடலாம்.

அன்புடன் ஊர்வாழ் உறவுகளில் ஒருவன் உங்கள் இசைக்கவிஞன் சிறுப்பிட்டி எஸ் தேவராசா

இது சிறுப்பிட்டி வடக்கை சேர்ந்த இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா அவர்களால் உருவாக்கப்பட்டு எழுதி இசையமைக்கபட்ட பாடல்கள் கீழே