சிறுப்பிட்டி இலுப்பையடி முத்துமாரி அம்மன் திருப்பணி 12.ஆண்டுக்கு ஒருமுறை கும்பா அபிசேகத்தையொட்டி சிறப்புற பணிகள் இடம்பெறுகின்றது,
இதற்கு ஊர்மக்களும் புலத்தில்வாழ்பவர்களும் தனிப்பட்ட சிலவேலைகளை செய்து தந்துள்ளதுடன் பல எமது ஊர்மக்கள் புலத்திலிருந்து நிதியுதவியும் செய்ததால் முத்துமாரியின் திருப்பணிகள் சிறப்பாக நடைபெற்றுவருகின்றது
இதன் பணிக்கான முழுமை பணிகளில் சிலபணிகள் இன்னும் இருக்கின்ற படியால் எமது ஊரைச்சேர்ந்த முத்துமாரியின் பக்தர்களே நீங்களும் பணியில் இணைய முத்துமாரி உங்களை அழைக்கிறா இவள் துணைகொண்டே எங்கள் வாழ்வு சிறந்து நிற்கின்றது அவள் இல்லம் சிறக்க அவள் உள்ளம் குளிர எமது வாழ்வு சிறக்கும் அல்லவா ..அதனால் இணைவோம் வருகின்ற மாத ஆரம்பப்பகுதியில் கும்பாவிசோகம் நடைபெற இருப்பதால் இதுவரை உங்கள் பணிகளை செய்யாமல் இருப்போர் உங்கள் பணிக்காலம் வந்துவிட்டது விரைவாக உங்கள் பணி சிறக்க உங்களை வேண்டி நிற்கும் நிர்வாகமும் ஊர்மக்களும்,
விரைவில் இதுவரை பங்களித்தவர்களின் விபரம் இணைக்கப்படும் தெய்வத்தால் வாழ்வு உயர்வு திருப்பணியால் மன நிறைவு அல்லவா இணைவோம் அம்மன் அவள் ஆயப்பணிக்காய் வருங்கள் வளம்பெருகும்: