siuppiddy muthumarai2அம்மன் வேட்டைக்காக செல்லும் நாள் இன்று அதை எங்கள் முதியோர் வேட்டைத்திருவிழா என்று சொல்லிவைத்துள்ளார்கள் எமது ஊர்மேல் அம்மன்பார்வை பட்டு அவள்விழி அருளால் ஊர் உலகம் செழிக்கும் என்றும் முதியோர்வாக்கு அவள் வேட்டைக்காக புறப்பட்டுப்போகும் காட்சி கண்கொள்ளாக் காட்சியாகும் , சிறுப்பிட்டி இலுப்பையடிமுத்துமாரி அம்மன் திருவிழா இன்றைய வேட்டைத்திருழா உபயமானது பாலசிங்கம்-பொன்னம்மா குடும்பத்தினரின் உபயம் ஆகும், முத்துமாரி அம்மன் அலங்காரத்திருவிழா (30.03.2014) ஒன்பதாம்நாள் திருவிழாவாக பாலசிங்கம்-பொன்னம்மா  குடும்பத்தினரின் , நிலத்தில் வாழும் தமது பிள்ளைகள் துணையோடு சிறப்புற வேட்டைத்திருவழா சாமிவீதிவந்து சிறப்பாக பூசைகள்நிறைவேறியுள்ளது எனத் தகவல் எம் ஊர் இணையத்துக்காக எமது இணைப்பாளர் அம்மன் பக்தர் திரு.மயூரன்.

 

வேட்டைக்கு செல்கிறாள் முத்துமாரி

வேண்டிட தருகிறாள் ஆசிகோடி

நாட்டுக்கும் வீட்டுக்கும் நல்லதே செய்திங்கு

நம்மைக்காத்துவருகிறாள் முத்துமாரி

 

 ஊர்மீது அவள்பார்வை பட்டாலேபோதும்

உயர்வான நிலையாவும் அவளாலேதோன்றும்

பார்போற்றும் அம்மனின் புகழ்பாட நாளும்

பட்டினி துன்பங்கள் பறந்திங்கு போகும்

 

நாளைக்கு பொளுதது விடிந்திடக்கூடும்

நாயகி உன்னாலே அது இங்கு தோன்றும்

சோலைக்கு மலராக வாழ்விங்கு வேண்டும்

சொல்லியே உன்னாமம் ஓதிடவேண்டும்