சென்னைக்கு மீண்டும் சிவப்பு எச்சரிக்கை
வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி தமிழகம், ஆந்திரா கடற்பகுதியை நெருங்குவதால் சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் கனமழை பெய்யும் என இந்தியா வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் தெரிவிக்கையில், தென்கிழக்கு மற்றும் மத்திய கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதையொட்டிய அந்தமான் கடல் பகுதியில், காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுகிறது.
இது மேற்கு திசையில் நகர்ந்து, நாளை ஆந்திராவின் தெற்கு பகுதி மற்றும் தமிழக வடக்கு கடலோர மாவட்டங்களை நெருங்கும். இதனால் குறித்த மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தற்போதைய நிலையில் மேலும் வலுவடையாமல் காற்றழுத்த தாழ்வு பகுதியாகவே தமிழக பகுதியை நெருங்கும். அதனால் சென்னை உள்ளிட்ட வடக்கு கடலோர மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது’ எனத் தெரிவித்துள்ளார்.