ஓய்வுபெற்ற பொலிஸ் பரிசோதகர் ஆயுதங்களுடன் கைது!
அமைச்சர் பாதுகாப்புப் பிரிவில் கடமையாற்றிய ஓய்வுபெற்ற பொலிஸ் பரிசோதகரிடமிருந்து, கைத்துப்பாக்கி, கைக்குண்டு மற்றும் பல்வேறு தோட்டாக்கள் என்பன நேற்று (27) விசேட பொலிஸ் குழுவினால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
வெலிபென்ன, கல்மட்ட, நவ மாவத்தை பிரதேசத்தில் வசிக்கும் ஓய்வுபெற்ற பொலிஸ் பரிசோதகரான சந்தேகநபர், துப்பாக்கி, ஒரு கைக்குண்டு மற்றும் 350க்கும் மேற்பட்ட தோட்டாக்களுடன் வெலிபென்ன பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
குறித்த முன்னாள் பொலிஸ் பரிசோதகர் பொலிஸாரின் ஆயுதக் களஞ்சியசாலைக்கு பொறுப்பாக கடமையாற்றி வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மத்துகம நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார் என்று வெலிபென்ன பொலிஸார் தெரிவித்தனர்.