கற்றாளையால் ஏற்ப்படும் ஆபத்துக்கள்
ஆரோக்கிய பிரச்சினையில் இருந்து சரும பிரச்சனைகள் அனைத்திற்கும் அருமருந்தாக கற்றாழை விளங்குகின்றது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
கற்றாழையை அளவாக பயன்படுத்தினால்தான் அது மருந்து.
அளவுக்கு மீறினால் அது நஞ்சாக மாறிவிடும். மேலும், சில நோய்களால் பாதிக்கப்பட்டு மருந்து மாத்திரைகளை பயன்படுத்துபவர்கள் மறந்தும் கூட கற்றாழை உட்கொள்ளக்கூடாது.
இன்று யாரெல்லாம் கற்றாழையைத் தவிர்க்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
இதய நோயாளிகள்
இதய நோய் உள்ள நோயாளிகள் கற்றாழை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். மருத்துவரின் ஆலோசனையின்றி கற்றாழையை உட்கொள்ளக் கூடாது. கற்றாழையை அதிக அளவில் உட்கொண்டால், அது உடலில் அட்ரினலின் ஹார்மோனை அதிக அளவில் உற்பத்தி செய்கிறது. இது ஒழுங்கற்ற இதயத் துடிப்பு பிரச்சனையை ஏற்படுத்தும் மற்றும் பதட்டத்தன்மையை அதிகரிக்கும். இது உயிருக்கே பேராபத்தை ஏற்படுத்தும்.
மலச்சிக்கல் மற்றும் வாயு பிரச்சனை உள்ளவர்கள் சாப்பிட கூடாது
மலச்சிக்கல் மற்றும் வாயு பிரச்சனை இருந்தால், கற்றாழை சாப்பிட வேண்டாம். இது வாயுபிரச்சனையை இன்னும் அதிகமாக்கக்கூடும். மேலும் மலம் கழிக்கும் செயல்முறையில் கற்றாழையால் சில தாக்கங்கள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது.
கர்ப்ப காலத்தில் வேண்டாம்
கர்ப்ப காலத்தில் கற்றாழையை உட்கொள்வது கருப்பை சுருங்கும் சிக்கல்களை ஏற்படுத்தும். இது கருச்சிதைவு மற்றும் பிறப்பு குறைபாடுகள் தொடர்பான பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.
கருவுற்றிருக்கும் பெண்கள் கற்றாழையை தொடக் கூட வேண்டாம்.
இரத்த அழுத்த பிரச்சினை உள்ளவர்கள்
உங்கள் இரத்த அழுத்தம் குறைந்தால், கற்றாழையைப் பயன்படுத்துவதை நிறுத்துவது நல்லது.
கற்றாழை ரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது. இரத்த அழுத்தம் ஏற்கனவே குறைவாக இருந்தால் கற்றாழையை உட்கொள்வது உங்களுக்கு தீங்கு விளைவிக்கும்.
சிறுநீரக கற்கள் பிரச்சனை
சிறுநீரக கற்கள் பிரச்சனை உள்ளவர்களும் கற்றாழை சாப்பிடக்கூடாது. இது உங்கள் பிரச்சனையை அதிகரிக்கக்கூடும்.