அந்தக் கால நினைப்பு.
அரும்பு மீசை.வந்தபோது.
அவளைபார்த்த நினைவு
அக்கம் பக்கம்.பார்த்துக் கொண்டு
அருகில் சென்ற நினைவு.
குறும்புக் கண்ணால்
கதைகள் பேசி
கோதை மனதை இழுத்து.
குடிகொண்டாள்.
என் மனதில் கோவில்
சிலை யாய் நின்று.
அலைந்து திரிந்து
காதல் கொண்ட
அந்தக் கால நினைப்பு.
அம்மாடியோ
மனதில் இன்று
நினைத்துப் பார்த்தால் சிரிப்பு.
ஆக்கம் இசைக்கவிஞர் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா
கருவான திகதி 26.07.2021 உருவான நேரம் காலை11.32 மணி