சிறுப்பிட்டி மாதியந்தனை – இ-முத்துமாரி அம்பாள் புதிய சித்திரத் தேர் அங்குரார்ப்பண விஞ்ஞாபனம் – 2023
சிறுப்பிட்டி வடக்கு – மாதியந்தனை – இலுப்பையடி
அருள்மிகு முத்துமாரி அம்பாள் தேவஸ்தானம்
புதிய சித்திரத் தேர் அங்குரார்ப்பண (நாள் வேலை) விஞ்ஞாபனம் – 2023
முத்துமாரி அடியார்களே!
இலுப்பை மர நிழலில் வீற்றிருந்து அருள் பாலித்துக் கொண்டிருக்கும் முத்துமாரி அம்பாளுக்கு நிகழும் மங்கலகரமான சோபகிருது வருஷம் சித்திரைத் திங்கள் 20ஆம் நாள் (03.05.2023) புதன்கிழமை அத்த நட்சத்திரமும் திரயோதசி திதியும் கூடிய காலை 9.00 மணிமுதல் 10.25 மணிவரையுள்ள சுப வேளையில் புதிய எண்கோள வடிவ சித்திரத் தேருக்கான நாள் வேலை விநாயகர் வழிபாட்டுடன்நடைபெறத் திருவருள் கைகூடியுள்ளது.
அடியார்கள் அனைவரும் ஆசார சீலர்களாக ஆலயத்திற்கு வருகைதந்து நாள்வேலையில் கலந்து வழிபாடாற்றி அப்பாளின் திருவருளை பெறுவீர்களாக.
ஸ்தான சிவாச்சாரியார் சிவாச்சார்ய திலகம்
கிரியா பூசணம்
சிவபிரம்மஸ்ரீ பால கஜீல சிவாச்சார்யார்
ஸ்தபதி விஷ்வ பிரம்மஸ்ரீ கலாகேசரி
சரவணமுத்து ஜெயமோகன் J.P
எல்லோரும் வருக! முத்துமாரி அருள் பெறுக!
அருள்மிகு முத்துமாரி அம்பாள் தேவஸ்தானம் சிறுப்பிட்டி.
இவ்வண்ணம்,
தேர்த்திருவிழா உபயகாரர்கள்இ பரிபாலன சபையினர்,
அடியார்கள்.