சிறுப்பிட்டி மாதியந்தனை முத்துமாரியம்மன் சித்திரத்தேர் வெள்ளோட்ட விழா 2023
சிறுப்பிட்டி மாதியந்தனை இலுப்பையடி அருள்மிகு
முத்துமாரியம்மனுடைய
புதிய எண்கோண சித்திரத்தேர் வெள்ளோட்ட விழா 2023
ஆத்தாளை எங்கள்
அபிராம வல்லியை
அண்டம்எல்லாம் பூத்தாளை
மாதுளம் பூநிறத் தாளைப் புவி அடங்கக்
காத்தாளை அங்குச
பாசம் சுமம் கரும்பும்அங்கை
சேர்த்தாளை
முக்கண்ணி யைத்தொழு
வார்க்கொரு தீங்கில்லையே.
முத்துமாரியம்மன் அடியார்களே!
நிகழும் சோபகிருது வருஷம் 27.10.2023 வெள்ளிக்கிழமை சித்தாமிர்த யோகமும் ரேவதி நட்சத்திரமும் கூடிய முற்பகல் 9.03 – 10.33 வரையுள்ள சுபமுகூர்த்த வேளையில் முத்துமாரியம்மனுக்கு புதிதாக நிர்மாணிக்கப்பட்ட புதிய எண்கோண வடிவிலான சித்திரத்தேர் வெள்ளோட்டம் காணவுள்ளது.
புதிய சித்திரத்தேர் நிர்மாணம்
ஸ்தபதி
கலாகேசரி
Dr. சரவணமுத்து ஜெயமோகன் (J.P)
9 அவர்தம்
(சரவணன் கலைக்கூடக் கலைஞர்கள்)
(அரசகேசரி பிள்ளையார் வீதி, நீர்வேலி மத்தி.)
கரும்பொன் ஸ்தபதி
Dr. சரவணமுத்து ஜெயமோகன் (J.P)
ஆச்சாரியார்
வர்ணவேலை
ஓவியத்திலகம்
V. ஐங்கரன் குழுவினர்
முத்துமாரியம்மனின் வெள்ளோட்ட விழாவில் அடியார்கள் கலந்து சிறப்பித்து முத்துமாரி அம்மனின் அருளைப் பெற்றுய்யுமாறு அன்புடன்
அழைக்கின்றோம்.
மாதியந்தனை, சிறுப்பிட்டி
இங்ஙனம்
தேர்த்திருவிழா உபயகாரர்களும்,
ஆலய பரிபாலன சபையினரும், அடியார்களும்.
முத்துமாரியம்மனை சரணடைந்தால் அதிக வரம் பெறலாம்